முகப்பு
  உ.வே.சா வரலாறு
 

டாக்டர் உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டு

  உ.வே.சா பதிப்பித்த, எழுதிய நூல்கள்
 

நூல்நிலையம் பற்றிய தகவல்கள்

  ஊ.வே.சா.வின் ‘என் சரித்திரம்’
  உ.வே.சாவின் ஓலைச்சுவடிகள்
  பதிப்புகளும், வெளியீடுகளும்
 

விழாக்கள்

  நூலக ஒளிப்படங்கள்
 
 
 

எதிர்காலத் திட்டங்கள்

  குடும்ப ஓளிப்படங்கள்
  முகவரி

‌‌டாக்டர். உ.வே.சா. நூல்நிலையத்தின் எதிர்காலத் திட்டங்கள் :      

1.  டாக்டர். உ.வே.சா. அவர்கள் சேகரித்தவையும் நன்கொடையாகப் பெறப்பட்டவையமாகிய 26998 நூல்களையும் குறுந்தகடுகளில் பதித்தல்.
2. வெளிவராத அனைத்து ஓலைச்சுவடி நூல்களையும் படியெடுத்துப் பதிப்பித்தல்.
3. சங்க இலக்கிய ஓலைச்சுவடிகள், காப்பிய - தொல்காப்பிய ஓலைச்சுவடிகள், பதினெண் கீழ்க்கணக்கு ஓலைச்சுவடிகள் அடங்கிய குறுந்தகடுகளைத் தமிழ் இணையப் பல்கலைக்கழக இணைய தளத்தில் இட்டு உலகறியச் செய்தல்.
4. டாக்டர். உ.வே.சா. முயன்று தேடித் தொகுத்துப் பாடுபட்டுப் பதிப்பித்த மேற்கணக்கு நூல்களில் 15, காப்பியங்களில் 3 + 2 ஆக 20 நூல்களும் இடையறாது கிடைக்கும் வண்ணம் தொடர்ந்து பதிப்பித்தல். டாக்டர். உ.வே.சா. பதிப்பித்த அனைத்து நூல்களையும் பதிப்பித்தல்.
5. செவ்வியல் தமிழ் ஆய்வுமையம் என்ற நிலையில் ஓலைச்சுவடிகளின் துணையுடன் மேற்காண் நூற்களை நுண்ணாய்வு செய்தல். பாடபேதத்தெரிவு ஆய்வு செய்தல்.
6. நூற்றாண்டுகட்கு முற்பட்ட மறுபதிப்புப் பெறாத நூல்களைத் தொடர்ந்து வெளியிடுதல்.
7. டாக்டர். உ.வே.சா. அவர்களின் நாட்குறிப்புகள், இசை அறிஞர்கள் பற்றிய குறிப்புகள் ஆகியவற்றைப் பதிப்பித்தல்.

இப்பெரும் பணிகளுக்கும் தமிழ்நலம் காக்கும் அன்பர்களின் உதவிகள் எதிர்பார்க்கப்படுகிறது.